×

ஜெர்மனி அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு

பெர்லின்: ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 12 பேர் காயம் அடைந்தனர். ஜெர்மனியின் மேற்கு நகரமான ரேடிங்டன் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடியிருப்பின் ஒரு வீட்டில் நேற்று திடீரென குண்டு வெடித்தது. இதில் 10 தீயணைப்பு வீரர்கள், 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவரது சடலம் எடுத்துச்செல்லப்பட்டது. அவர் குண்டுவெடிப்பில் பலியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விபத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த கட்டிடத்தை சுற்றி அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

The post ஜெர்மனி அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு appeared first on Dinakaran.

Tags : Germany ,Berlin ,Germany's… ,Dinakaran ,
× RELATED யுரோ கோப்பை கால்பந்து; ஸ்பெயின்,...