டெல்லி: 5ஜி செல்போன்களின் விலை இந்தாண்டு இறுதிக்குள் ரூ.10 ஆயிரத்துக்கும் கீழ் குறையகூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் 5ஜி சேவைக்கு வேகமாக மாறி வருகின்றனர். இதை தொடர்ந்து 5ஜி தொழில் நுட்பத்திற்கேற்ற செல்போன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.10,000-க்கும் கீழ் இந்தாண்டு இறுதிக்குள் குறைய கூடும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 5ஜி ஸ்மார்ட் போன்களுக்கான மின் அணு சிப்களை தயாரிக்கும் தைவானின் மீடியா டெக் நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் குவால்காம் நிறுவனத்திற்கும் கடும் தொழிற்போட்டி நிலவி வருகிறது.
இதனால் அவை கணிசமாக விலை குறைத்து வருவதால் 5ஜி ஸ்மார்ட் போன்கள் விலை குறையும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே 5ஜி சேவை அறிமுகத்திற்கு பிறகு டேட்டா நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர டேட்டா நுகர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் 22.2ஜிபி டேட்டாவாக இருந்த நிலையில் இந்தாண்டு மார்ச்சில் அது 23.1 ஜிபி டேட்டாவாக அதிகரித்துள்ளது. இதேபோல ஏர்டெல் வாடிக்கையாளர்களின் மாதாந்திர சராசரி டேட்டா பயன்பாடு 20.75 ஜிபியில் இருந்து 21.3 ஜிபியாக உயர்ந்துள்ளது.
The post 5ஜி செல்போன்களின் விலை இந்தாண்டு இறுதிக்குள் ரூ.10 ஆயிரத்துக்கும் கீழ் குறையகூடும்: சந்தை நிபுணர்கள் தகவல் appeared first on Dinakaran.