×

நாளை எருக்கஞ்சேரி கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: எருக்கஞ்சேரி கழிவு நீரிறைக்கும் நிலையம் நாளை செயல்படாது என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளதாவது:கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மண்டலம்-4க்குட்பட்ட எருக்கஞ்சேரி கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது.

எனவே, மண்டலம்-4, 5, 6 மற்றும் 8-க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி அலுவலர்களையும் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் தொடர்பு கொள்ளவும்.

பகுதிப் பொறியாளர் – 4 கைபேசி எண்.8144930904
பகுதிப் பொறியாளர் – 5 கைபேசி எண்.8144930905
பகுதிப் பொறியாளர் – 6 கைபேசி எண்.8144930906
பகுதிப் பொறியாளர் – 8 கைபேசி எண்.8144930908
தலைமை அலுவலகம், 044-4567 4567 (கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்).இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

The post நாளை எருக்கஞ்சேரி கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Erukkancheri ,Water Board ,Chennai ,Drinking Water Board ,Dinakaran ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...