×

திருக்குறளை பிராமியிலும், வட்டெழுத்திலும் எழுதியுள்ள தமிழ் ஆசிரியர்: இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

திருச்சி: பொதுமறை என போற்றப்படுகின்ற திருக்குறளை காலத்தால் அழியாத மொழியாக கருதப்படும் பிராமியிலும், வட்டெழுத்திலும் எழுதி சாதனை படைத்துள்ளார் தமிழ் ஆசிரியர் ஒருவர். திருக்குறளை ஆங்கிலம், ஹிந்தி, பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்த்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் புகழ்மிக்க நூலகங்களில் வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் தமிழ் ஆசிரியர் ஒருவர் திருக்குறளை கல்வெட்டு மொழியிலும், பிராமி மொழியிலும் எழுதி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் வாசன்வேலி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணம் தற்போது மாவட்டம் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். தமிழ் மொழியில் முனைவர் பட்டம் பெற்று சற்குணம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டு மொழி தொடர்பான பயிற்சி பெற்று இருக்கிறார். அப்போது ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆன்மீக புத்தகங்களை எழுதிய சற்குணம் தொடர்ச்சியாக 1330 திருக்குறளையும் பிராமி தமிழ் மற்றும் வட்டெழுத்திலும் எழுதியுள்ளார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற வரிகளுக்கிணங்க புகழ் மிக்க திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஆதி எழுத்துருவிலும், கல்வெட்டு மொழியிலும் எழுதியுள்ள இந்த ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

The post திருக்குறளை பிராமியிலும், வட்டெழுத்திலும் எழுதியுள்ள தமிழ் ஆசிரியர்: இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruchi ,Tirukkurallai ,
× RELATED கொலை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டாஸ்