×

சித்திரை கொடை விழா ஆறுமுகநேரி, மே 11: ஆறுமுகநேரி முத்து

கிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோயிலில் சித்திரை கொடை விழா பூஜையுடன் துவங்கி 8 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் திருவிளக்கு பூஜை, வில்லிசை வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் விழா அன்று காலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் அமைந்துள்ள செந்தில் விநாயகர் கோயிலில் இருந்து அலங்கார யானை முன்செல்ல பால்குட பவனி நடந்தது. இதனை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் துவக்கி வைத்தார். அம்மனுக்கு கும்ப பூஜை, அன்னதானம் நடந்தது. மதியம் அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுவாமிகள் மஞ்சள் நீராடி தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இரவில் சாமக்கொடை, தொடர்ந்து அம்மன் சிம்ம வாகன வீதியுலா நடைபெற்றது.

The post சித்திரை கொடை விழா ஆறுமுகநேரி, மே 11: ஆறுமுகநேரி முத்து appeared first on Dinakaran.

Tags : Picture Gifting Festival ,Arumukaneri ,Muthu ,Krishnapuram Mutharamman Temple ,Chitrai Kodai Festival ,Thiruvilakku Pooja ,Chitrai Kodai Festival Arumukaneri ,
× RELATED மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது..!!