×

கோயில் திருவிழாவில் மோதல்: வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தேவகோட்டை, மே 11: தேவகோட்டை ஜீவா நகரில்  கல்லாம்பிரம்பு காளிஅம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடந்தது. நேற்று திருவிழா முடிவில் கோயில் நிர்வாகிகள் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்தனர். அப்போது விழாக் கமிட்டியினருக்கும், இளைஞர் அணியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எலக்ட்ரீசியன் நந்தகோபாலை(47), லோடுமேன் கருப்பையாவின் மகன் தமிழரசன்(22) என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில், இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

வீரமுத்து(36) மற்றும் நந்தகோபால்(47) ஆகியோர் மீது கருப்பையாவின் மகள் துர்காமணி (20) புகார் அளித்தார். அப்போது போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டிருந்த தமிழரசனின் தலையில், வீரமுத்து அரிவாளால் வெட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த தமிழரசன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மோதல் தொடர்பாக போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கோயில் திருவிழாவில் மோதல்: வாலிபருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Clash at temple festival ,Devakottai ,Devkottai Jiva Nagar ,Kallamprambu Kaliamman temple ,Chitrait festival ,
× RELATED தேவகோட்டையில் கால்வாயில் விழுந்த காளை மீட்பு