×

முதுமலை யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு ஜெர்சி பரிசளித்தார் எம்.எஸ்.தோனி..!!

சென்னை: முதுமலை யானை பராமரிப்பாளர்கள் பொம்மன், பெள்ளி தம்பதிக்கு எம்.எஸ்.தோனி ஜெர்சி பரிசளித்தார். தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்றது. இந்த படம் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் தம்பதியின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டி இருந்தது. கிருஷ்ணகிரியில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த பொம்மி என்ற குட்டி யானையும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பை பொம்மன்-பெள்ளி என்ற பாகன் தம்பதியிடம் வனத்துறை ஒப்படைத்தது.

இந்நிலையில், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சாலவஸ் மற்றும் அப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனியை சந்தித்தனர். அவர்களுக்கு டோனி 7-ம் எண் கொண்ட சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஜெர்சியை அவர்களது பெயர் பதித்த சிஎஸ்கே ஜெர்சியை பரிசளித்தார். ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன் – பெள்ளி தம்பதியை தோனி பாராட்டினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post முதுமலை யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு ஜெர்சி பரிசளித்தார் எம்.எஸ்.தோனி..!! appeared first on Dinakaran.

Tags : Mutumalai Elephant ,Pomman ,Jersey ,S.S. ,DONI ,Chennai ,MS ,S.S. Thoni ,Mudumalai Elephant ,M. ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது