×

குடியாத்தம் அத்தி குழுமம் சார்பில் நடமாடும் மருத்துவமனை வாகனம்-குழும தலைவர் துவக்கி வைத்தார்

வேலூர் : குடியாத்தம் அத்தி குழுமம் சார்பில் நடமாடும் மருத்துவமனை வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.குடியாத்தம் அடுத்த காக்காதோப்பு கிராமத்தில் உள்ள அத்தி குழுமம் சார்பில் அத்தி நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடக்க விழா நடந்தது. அத்தி கல்வி குழும தலைவர் டாக்டர் சவுந்தரராஜன் தலைமை தாங்கி, கொடியசைத்து வாகனத்தை துவக்கி வைத்தார். மேலும், மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அத்தி மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கென்னடி முன்னிலை வகித்தார்.

குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமரவேல் வரவேற்றார். டாக்டர்கள் கோப்பெருந்தேவி, ஜெய, செவிலியர்கள் நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் சிகிச்சை அளிக்க சென்றனர். நிகழ்ச்சியில், குடியாத்தம் பாலிடெக்னிக் அத்தி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் வீரபாண்டியன், செவிலியர் கல்லூரி முதல்வர் பால்ராஜ், சீனி.துரை ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அத்தி கல்வி குழும தலைமை அலுவலர் டாக்டர் விஜய் செய்திருந்தார்.

The post குடியாத்தம் அத்தி குழுமம் சார்பில் நடமாடும் மருத்துவமனை வாகனம்-குழும தலைவர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Gudiyatham Athi Group ,Vellore ,Kakathoppu village ,Kudiyatham ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...