×

கல்லாக்கோட்டை ஊராட்சியில் கோடை நெல் சாகுபடி பணி விறுவிறுப்பு

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியில் கோடை நெல் சாகுபடியில் விவசாய பணியில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் ஆழ்துளை கிணற்று நீரின் உதவியுடன் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் நீர் நிலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், கோடை சாகுபடிக்காக சேற்று உழவு செய்திருந்த வயல்களில் தண்ணீர் பற்றாக்குறையில்லாமல் தேங்கியது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கத்திரி வெயில் துவங்கி நாளில் இருந்து மழை பெய்து வருவதால் கந்தர்வக்கோட்டை பகுதியில் குளிர்ந்த காற்று வீசத்துவங்கியது. இந்த ஜெல்லென்ற சூழ்நிலையில் பயிர்களுக்கு களை பறிப்பதும், மரவள்ளி கிழங்கு வெட்டுவதும், நாற்று நடுவதும் என விவசாயிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, கல்லாக்கோட்டை பகுதியில் விவசாயிகள் கோடை சாகுபடிக்காக நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை சாகுபடி குறித்து விவசாயிகள் கூறுகையில், கோடை சாகுபடி செய்யப்படும் நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், பெறப்படுவதால் விற்பனை சுலபமாக உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் நிலையத்தை கூடுதலாக்க வேண்டும் என்றனர்.

The post கல்லாக்கோட்டை ஊராட்சியில் கோடை நெல் சாகுபடி பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakotta ,Kandarvakotta ,Pudukkotta District ,Kandarvakotta Padrakshi Union ,Pudukkotta ,Gallakotta ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி