×

ராஜஸ்தான் உதய்பூரில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

ராஜஸ்தான்: ராஜஸ்தான் உதய்பூரில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அபூரோடு பகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உதய்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்க நாட்டினார்.

ராஜஸ்தானில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். நவீனமயமாக்கப்பட உள்ள உதய்பூர் ரயில் நிலையத் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாடினார். இதனால் ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடியை கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா மற்றும் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து சாலையில் இரு புறமும் பிரதமர் மோடிக்கு மலர் தூவி மக்கள் வரவேற்றனர். ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் உள்ள ஸ்ரீ நாத்ஜி கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று வழிப்பாடு நடத்தினார்.

இன்று 5500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில், எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது. நாட்டில் நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் பார்க்க முடியாத அளவுக்கு சிலர் எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியிருக்கிறார்கள். அவர்கள் சர்ச்சையை உருவாக்க மட்டுமே விரும்புகிறார்கள். வேகமான வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளுடன் நவீன உள்கட்டமைப்பும் அவசியம்.போதுமான மருத்துவக் கல்லூரிகள் முன்பே கட்டப்பட்டிருந்தால், டாக்டர்கள் பற்றாக்குறையை நாம் சந்திக்க வேண்டியதில்லை

ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைத்திருந்தால், 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், ‛ஜல் ஜீவன்’ திட்டத்தை துவக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்மறையான நபர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. அவர்கள் அரசியல் பற்றி மட்டும் சிந்திப்பார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

The post ராஜஸ்தான் உதய்பூரில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Udaipur, Rajasthan ,Rajasthan ,Abu Road ,Udaipur ,Dinakaran ,
× RELATED மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு...