×

ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத வறட்சியால் மக்கள் பாதிப்பு: டிராக்டர்களை மெதுவாக இயக்கி விவசாயிகள் போராட்டம்

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் வறட்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தி உள்ளனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 1961-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் கடந்த மாதம் பதிவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாமல் போனதால் ஸ்பெயின் நாட்டில் உணவு பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் லீடா நகரில் திரண்டு டிராக்டர்களை மெதுவாக இயக்கி பேரணியாக சென்றனர். கோதுமை உட்பட வேளாண் உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டதால் ஸ்பெயின் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். கூடுதல் விலை, மானியம் வழங்கி உதவிட வேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

The post ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத வறட்சியால் மக்கள் பாதிப்பு: டிராக்டர்களை மெதுவாக இயக்கி விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Spain ,Madrid ,
× RELATED ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல்...