×

காரைக்குடி பழைய பேருந்து கட்டடம் பராமரிப்பு இல்லாமல் மிகவும் சேதமடைந்து பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாக மக்கள் அச்சம்

காரைக்குடி: காரைக்குடி பழைய பேருந்து கட்டடம் பராமரிப்பு இல்லாமல் மிகவும் சேதமடைந்து பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சிவங்கை மாவட்டத்தில் பெருநகராட்சி என்ற அந்தஸ்து கொண்ட காரைக்குடியில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன அவற்றில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தேவகோட்டை, திருப்பத்தூர், கல்லல் , திருமயம், மாத்தூர் உள்ளிட்ட 50ருக்கும் மேற்பட்ட இடங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

1987 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள் வந்து செல்கின்றனர். 36 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தின் மேற்க்குறை முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமைடைந்து காணப்படுகின்றது. அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்து செல்லும் நிலையில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால், கட்டடத்தின் மேற்குறை இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அச்சம் பொது மக்கள் தெரிவிகிணறுகிறார்கள். இது தவிர பயணிகள் உட்காரும் இருக்கைகள் உடைந்தும் நடைமேடைகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, ஆகவே அசபாவிதம் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்னர் பேருந்து நிலையத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு காரைக்குடி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து காரைக்குடி நகராட்சி நிறுவகத்தினரிடம் கேட்டபோது பேருந்து நிலையத்தை சீரமைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கின்றனர்.

The post காரைக்குடி பழைய பேருந்து கட்டடம் பராமரிப்பு இல்லாமல் மிகவும் சேதமடைந்து பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாக மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Karaigudi ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க