×

சாத்தான்குளம் அருகே வேலவன் புதுக்குளத்தில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,500 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 2,500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா முட்டைகளை காவல் துறையினர் கைப்பற்றியது. மதுரை கீரைத்துறையில் கைதானவர் அளித்த தகவலின் அடிப்படையில் வேலன்புதுக்குளம் கிராமத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது தோட்டத்தில் 50 முட்டைகளில் பதுக்கி வைக்கபப்ட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரையில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற திட்டத்தில் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் லாரியில் பதுக்கி வைக்கப்பட்ட 2,500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வேலவன் புது குளத்தில் தனியார் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்த 2,500 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் மதுரை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

The post சாத்தான்குளம் அருகே வேலவன் புதுக்குளத்தில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,500 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Velavan Buddhulam ,Satankulam ,Thothukudi ,Satankulam, Thothukudi district ,Velavan Buddhra ,Dinakaran ,
× RELATED வேலாயுதபுரத்தில் முப்பெரும்விழா