×

சீறுவளூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

 

அரியலூர்: சிறுவளூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடந்தது. அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவளூர் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

The post சீறுவளூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Sieruvalur panchayat ,Ariyalur ,Siruvalur panchayat ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...