×

எஸ்கேவி பள்ளி மாணவர்கள் சாதனை

 

திருச்செங்கோடு: பிளஸ்2 பொதுத்தேர்வில் திருச்செங்கோடு எஸ்கேவி பள்ளியில் பயின்ற மாணவர் நந்தகுமார் 600க்கு 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தமிழில் – 96, ஆங்கிலம் – 96, கணிதம் – 100, இயற்பியல் – 100, வேதியியல் – 99, உயிரியல் – 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சக்தி 600க்கு 582 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் தமிழில் – 95, ஆங்கிலம் – 94, கணிதம் – 95, இயற்பியல் – 99, வேதியியல் – 100, உயிரியல் – 99 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி திவ்யதர்ஷினி மற்றும் மாணவர் ஆதிஷ் ஆகியோர் 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ம் இடத்தை பிடித்துள்ளனர்.

மாணவி திவ்யதர்ஷினி தமிழில் – 93, ஆங்கிலம் – 92 கணிதம் – 99, இயற்பியல் – 97, வேதியியல் – 100, உயிரியல் – 99 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் ஆதிஷ் தமிழில் – 87, ஆங்கிலம் – 98, கணிதம் – 100, இயற்பியல் – 96, வேதியியல் – 99, கணினி அறிவியல் – 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதத்தில் 4 பேர், வேதியியல் 6 பேர், இயற்பியலில் ஒருவர், உயிரியலில் ஒருவர், கணினி அறிவியலில் 3 பேர் 100க்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை, பள்ளியின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, பொருளாளர் டாக்டர். பாலசுப்ரமணியம் மற்றும் பள்ளி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.

The post எஸ்கேவி பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : SKV ,Thiruchengode ,Nandakumar ,SKV School ,Tiruchengode ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல்