×

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி விரைவில் சசிகலாவை சந்தித்து பேசுவேன்

சென்னை: விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை சந்தித்து பேசினார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 11.15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலாவை விரைவில் சந்தித்து பேசுவேன். என்னை காலாவதியான மருந்து என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறுவது அவரது குணநலத்தை காட்டுகிறது.

இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். மேலும் டிடிவி.தினகரனை சந்தித்து பேசினீர்கள். இது தமிழக அரசியலில் எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதா, உங்களுடைய கொச்சி பயணத்தின் நோக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு அவர் பதில் கூறாமல் புறப்பட்டு சென்றுவிட்டார்.

The post ஓ.பன்னீர்செல்வம் பேட்டி விரைவில் சசிகலாவை சந்தித்து பேசுவேன் appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Sasikala ,Chennai ,Former ,Chief Minister ,Amamukha ,
× RELATED கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஒ.பன்னீர்செல்வம்