×

ஆத்துப்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையம்: அகற்ற கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டி சுமார் 35 வருடங்கள் ஆகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வந்தனர். இந்நிலையில் இந்த அங்கன்வாடி மையக்கட்டிடம் சேதமடைந்து, கட்டிடத்தின் உள்ளே விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மழைக்காலத்தில் கட்டிடத்தின் உள்ளே மழைநீர் புகுந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, பருப்பு மற்றும் மாணவர்களின் புத்தகப்பைகள் நனைந்தன. இதனால் அந்த மாணவர்கள் அங்கன்வாடி மையத்திற்குள் அச்சத்துடன் படித்து வந்தனர். இந்நிலையில் இதன் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். மேலும் பயன்பாடின்றி புதர்கள் மண்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆத்துப்பாக்கம் கிராமத்தில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்தமையம் தற்போது சேதடைந்ததால் புதியமையம் கட்டப்பட்டு இதில் மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே புதர்கள் மண்டி பயன்பாடின்றி சேதமடைந்து காணப்படும் பழைய அங்கன்வாடி மையத்தை அகற்ற வேண்டும் என கூறினர்.

The post ஆத்துப்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையம்: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Damaged Anganwadi ,Center ,Athuppakkam village ,Oothukottai ,Anganwadi center ,Periyapalayam ,Damaged ,Anganwadi ,Dinakaran ,
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...