×

புழல் அருகே பொதுக் கழிப்பிடத்தின் கதவுகள், ஆழ்துளை கிணறு சீரமைக்க கோரிக்கை

 

புழல், மே 20: புழல் அருகே உள்ள பொதுக்கழிப்பிடத்தின் கதவுகள் மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை சீரமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மண்டலம் 33வது வார்டு, புழல் அடுத்த லட்சுமிபுரம் அசோகா தெருவில் பொதுமக்கள் வசதிக்கென மாநகராட்சி சார்பில் இலவச பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அசோகா தெரு, பஜனை கோயில் தெரு, அம்மன் கோயில் தெரு, வில்லிவாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள் கழிப்பிடத்தில் உள்ள கதவுகள் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிப்பிடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், ஆழ்துளை கிணறும் பழுதாகி உள்ளது. இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திலிருந்து தண்ணீர் குழாய் மூலம் எடுத்து வரப்படுகிறது.

எனவே பழுதாகி உள்ள கதவு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புழல் அருகே பொதுக் கழிப்பிடத்தின் கதவுகள், ஆழ்துளை கிணறு சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Madhavaram Mandal 33rd Ward, Puzhal ,Lakshmipuram Ashoka Street ,Dinakaran ,
× RELATED புழல் – தாம்பரம் பைபாஸ் சாலையில்...