×

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து 5 பேர் கைது: ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு தேசிய புலனாய்வு அமைப்பினர் 5 பேரை கைது செய்துள்ளனர். சோதனையின்போது ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளிலும், என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையர்வர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதன்படி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட சுமார் 10 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையை தொடர்ந்து அப்துல் ரஸாக், முகமது அப்பாஸ், கெய்ஸர், சாதிக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சோதனையில் ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், சட்டவிரோத ஆவணங்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பதிமுதல் செய்தனர்.

ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேலும் 5 பேரை கைது செய்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து 5 பேர் கைது: ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NV ,Tamil Nadu ,GI PA ,Chennai ,National Intelligence Organization ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...