×

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்தது சிறப்புப் படை..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கானை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இம்ரான்கானை விசாரணைக்கு பாகிஸ்தான் போலீஸ் அழைத்துச் சென்றது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் 70 வயதான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு, கடந்த 2022ம் ஆண்டு கவிழ்ந்தது.

அதன்பிறகு இம்ரான் கானுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பிரதமராக இருந்த போது ஊழல் செய்தார், அரசு கருவூல நிதியை தவறாக பயன்படுத்தினார், வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இம்ரான் மீது சுமத்தப்பட்டது. வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் ஆஜாரவில்லை என்றால் ஜாமீனை ரத்து செய்துவிடுவோம் என ஏற்கனவே நீதிமன்றம் இம்ரானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இம்ரான் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான்கானை கைது செய்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப்படையினர் இழுத்துச் சென்றனர். இம்ரான்கானை கைது செய்த சிறப்புப் படையினருடன் அவரது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இம்ரான்கானை பாகிஸ்தான் சிறப்புப் படை கைது செய்தபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்து பேசிய விவகாரத்தில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்தபோது, அந்நாட்டு ராணுவத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டது தொடர்பான பரபரப்பு காட்சிகள் வெளியானது.

The post இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்தது சிறப்புப் படை..!! appeared first on Dinakaran.

Tags : Special Force ,Imrankan ,Islamabad High Court ,Islamabad ,Pakistan ,Imran Khan ,Dinakaran ,
× RELATED மூதாட்டியை கொன்றவருக்கு வலை தனிப்படை...