×

குளித்தலையில் பொதுக்கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர்-தொற்றுநோய் பரவும் அபாயம்

குளித்தலை : குளித்தலை நகராட்சி 14வது வார்டு பெண்கள் பொதுக் கழிப்பிட வளாகத்தில் இருந்து கழிவுகள் குடியிருப்பு பகுதியில் வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி 14வது வார்டு சண்முகா நகர் பகுதியில் பெண்கள் பொதுக் கழிப்பிடம் உள்ளது. இப்பகுதியில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பெண்கள் கோரிக்கையை ஏற்று பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார பொது கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது இந்த பொது கழிப்பிடத்தின் பின்பகுதியில் சுவர்கள் பழுதடைந்ததாதல் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து வரும் கழிவுநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து தேங்கி விடுகிறது. இதனால் மாலை நேரங்களில் கொசு தொல்லைகளுடன், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் குடியிருப்பு வாசிகள் ஒரு சில நேரங்களில் மூக்கை பிடித்துக் கொண்டு சுவாச பிரச்சனையில் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்து இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் குளித்தலை நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு வாசிகளுக்கு எவ்வித தொற்றுநோய் பரவாமல் இருக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுத்து 14வது வார்டு சண்முகா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை குழாய் மூலம் அருகில் உள்ள நீர் நிலையில் இணைக்கிற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post குளித்தலையில் பொதுக்கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர்-தொற்றுநோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,14th Ward Women's Public Toilet Complex ,Kulithalai Municipality ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...