×

வங்கக்கடலில் வலுவடைந்தது காற்றழுத்தத் தாழ்வு பகுதி: மோக்கா புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி செல்லும் என்பதால் வெயில் உச்சம் தொடும் என கணிப்பு!!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த புயலானது வடக்கு மற்றும் வடமேற்குதிசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்வரும் 11ம் தேதி நிலவக்கூடும் என்றும் அதன் பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் திரும்பி, வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோக்கா புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி செல்லும் என்பதால் ,மே 11ம் தேதிக்கு பிறகு வெயில் உச்சம் தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் இதுவரை இயல்பை விட114% கூடுதலாக மழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு நேர்மாறாக வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

The post வங்கக்கடலில் வலுவடைந்தது காற்றழுத்தத் தாழ்வு பகுதி: மோக்கா புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி செல்லும் என்பதால் வெயில் உச்சம் தொடும் என கணிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Moka cyclone ,Tamil Nadu ,Chennai ,southeastern Bengal Sea ,south Andaman Sea ,Moka ,
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!