×

மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமையில் நெல்லையில் அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு

நெல்லை, மே 9: நெல்லை வந்த நீர்வளத்துறை அமைச்சரும், பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்ட பணிகள் ஆய்வு, பொறியாளர்களுடன் ஆலோசனை, திமுக அரசின் 2ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நெல்லை வந்தார். நாகர்கோவிலில் இருந்து நெல்லை வந்த அவருக்கு புதிய பஸ் நிலையம் அருகே துதியின் கோட்டை ஆலயம் முன்பு நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமையில் செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, மாவட்ட அவைத் தலைவர் வி.கே. முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்மன், விஜிலா சத்யானந்த், எஸ்வி சுரேஷ், மண்டல தலைவர்கள் பாளை. பிரான்சிஸ், நெல்லை மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் வண்ணை சேகர், பகுதி செயலாளர்கள் துபை சாகுல், அண்டன் செல்லத்துரை, மாநகர துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் சுதாமூர்த்தி, மூளிகுளம் பிரபு பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பலராமன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞரணி ஆறுமுகராஜா, வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், ராஜேஸ்வரி, மலைக்கண்ணன், மாநகராட்சி கணக்குக் குழு உறுப்பினர் டாக்டர் சங்கர், மேலப்பாளையம் முகமதுஅலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, கவுன்சிலர்கள் வில்சன் மணித்துரை, கந்தன், உலகநாதன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், அஜய், வக்கீல்கள் மணிகண்டன், உமாமகேஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் பேபிகோபால், மாவட்ட பிரதிநிதி வல்லநாடு முத்து, மாவட்ட அமைப்பு சாரா தொழிற்சங்க செயலாளர் சைபுதீன், டாஸ்மாக் தொமுச அரசன்ராஜ், பொறியாளர் அணி சாய்பாபா, நெசவாளர் அணி அந்தோணி, அகஸ்டின் பெர்னாண்டோ, மகளிரணி சவுந்தரம், அனிதா, பத்மா, மேரி, பேரங்காடி ஐயப்பன், குப்பக்குறிச்சி சுந்தர், பிரேம் கணேசன், செந்தில், பேபி லட்சுமணன், மாரிமுத்து, ஜலீஸ் ரகுமான், வாசுகி செல்லத்துரை, தச்சை கர்ணன், சங்கர்நகர் பேரூர் செயலாளர் செல்வபாபு, முன்னாள் கவுன்சிலர் கமாலுதீன், பழ. கண்ணன், திட்டக்குழு உறுப்பினர் சுடலைக்கண்ணு, பேபிகுமார், தகவல் தொழில்நுட்ப அணி சிவசுப்பு, வேல்ராஜ், மில் குமார் மற்றும் இளைஞரணி நம்பிராஜன், சங்கரநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமையில் நெல்லையில் அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraymurugan ,Nelli ,Central District ,Djagar ,Abdulwahab MLA ,NALLI ,Nellai ,Water Resources ,General ,Dharasha ,
× RELATED நெல்லை சந்திப்பில் வளையதரசுற்று உயரம் அதிகரிப்பு