கவுகாத்தி: அசாமில் குடிப்பழக்கம், உடல் பருமன் உடைய போலீசார் 680 பேருக்கு தன்னார்வ விருப்ப ஓய்வு வழங்கப்படும் என அசாம் டிஜிபி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அசாம் டிஜிபி ஜி.பி.சிங் கூறுகையில்,‘‘ அசாம் போலீசில் 70 ஆயிரம் போலீசார் உள்ளனர். இதில், குடிப்பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் தகுதியற்ற போலீசார் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட மற்றும் பட்டாலியன் அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி தலைமையிலான இந்த கமிட்டி இதற்கான பட்டியலை தயாரித்து எஸ்பி அல்லது பட்டாலியன் கமாண்டருக்கு அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கை போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் தன்னார்வ விருப்ப ஓய்வுக்கான நபர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். உடல் தகுதி பெறுவதற்கு இவர்களுக்கு 4 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். தற்போது இந்த பட்டியலில் 680 போலீசார் உள்ளனர்’’ என்றார்.
The post குடிப்பழக்கம், உடல் பருமனான 680 போலீசாருக்கு விருப்ப ஓய்வு: டிஜிபி தகவல் appeared first on Dinakaran.
