×

பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து: முதல்வர் டிவிட்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கிய கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது அரசு ‘நான் முதல்வன் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள். உலகை வெல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Selvam ,Principal ,Dwight ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Devitt ,Dinakaran ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்