×

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை ஒன்றிய அரசு நடத்துவதை கைவிட வேண்டும்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டு முதல் அனைத்து இடங்களுக்கும் ஒன்றிய அரசின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் அலுவலகமே மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒன்றிய அரசு தெரிவித்துள்ள காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. நீட் என்ற பெயரில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதியை தீர்மானிக்கும் உரிமையை ஒன்றிய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தகட்டமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் உரிமையையும் ஒன்றிய அரசு பறித்துக் கொண்டால், இனி வரும் காலங்களில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவின் எந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் சேரலாம். அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருபுறம் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் பேசிக் கொண்டு படிப்படியாக மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பது நியாயமற்றது. எனவே, அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இப்போதுள்ள மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறையே தொடருவதை உறுதி செய்ய வேண்டும்.

The post தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை ஒன்றிய அரசு நடத்துவதை கைவிட வேண்டும்: ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt Medical Colleges' ,Union Government ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,Tamilnadu government ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...