×

தாரமங்கலம் அருகே கொடூரம் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தையை கொன்ற தாய்: 4வது கணவனுடன் சேர்ந்து சுவற்றில் அடித்த கொடூரம்

தாரமங்கலம்: உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால், ஒரு வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற தாய், 4வது கணவனுடன் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லேஷ்(32). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். இவர், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி, செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். அதே சூளையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி கலைவாணி(27), ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலை செய்தனர்.

இந்நிலையில், கலைவாணியுடன் மல்லேசுக்கு பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கடந்த மாதம், கலைவாணி கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு, மல்லேசுடன் ஓட்டம் பிடித்தார். பின்னர், ஓமலூர் அருகே புதூர்காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில், கணவன் -மனைவி எனக் கூறி, வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை, தன்னால் வளர்க்க முடியாது என மல்லேஷ் கூறிவந்துள்ளார். அன்றிரவு இருவரும் மது குடித்து விட்டு, உல்லாசமாக இருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் குழந்தை அழவே, ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து, குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துள்ளனர். இதில், காயமடைந்த குழந்தையை, மறுநாள் ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை நேற்று உயிரிழந்தது. தகவலறிந்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, கர்நாடகாவுக்கு தப்பிய இருவரையும் அங்கு சென்று பிடித்து வந்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கலைவாணிக்கு ஏற்கனவே 3 கணவர்கள் இருந்ததும், அவர்களை பிரிந்து வந்து, 4வதாக மல்லேஷூடன் குடும்பம் நடத்தியதும் கடந்த 1ம் தேதி இருவரும் போதையில் இருந்தபோது, குழந்தை அழுததால் சுவற்றில் வீசி அடித்ததும் தெரியவந்தது.

The post தாரமங்கலம் அருகே கொடூரம் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தையை கொன்ற தாய்: 4வது கணவனுடன் சேர்ந்து சுவற்றில் அடித்த கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Dharamangalam ,
× RELATED செங்கரும்பு கொள்முதல் செய்யும் பணி மும்முரம்