×

சாலை விபத்தை தடுக்க குளத்தை சுற்றி தடுப்பு வேலி

தொண்டி, மே 9: தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள குளத்தில் தடுப்பு வேலி இல்லாததால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையின் ஒரம் நம்புதாளையில் உள்ள குளத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் நிறம்பி விட்டது. ரோடும் குளமும் ஒன்றாக உள்ளது போல் தெரிகிறது. ஆனால் இந்த குளத்தில் தடுப்பு வேலி கிடையாது. வளைவான இடத்தில் குளம் உள்ளது. இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் குளம் இருப்பது தெரியாமல் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே பலமுறை வாகனங்கள் குளத்தின் உள்ளே சென்று விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பாண்டியராஜ் கூறியது, வளைவான பகுதியில் குளம் உள்ளதால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே சென்று விடுகிறது. கடந்த வருடம் ஒரு டூரிஸ்ட் வேன் மற்றும் டாக்டர் ஒருவரின் கார் உள்ளே சென்று தண்ணீரில் மிதந்து விபத்து ஏற்பட்டது. இந்த குளத்தின் கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அல்லது வேலி அமைத்தால் விபத்தினை தடுக்கலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சாலை விபத்தை தடுக்க குளத்தை சுற்றி தடுப்பு வேலி appeared first on Dinakaran.

Tags : Thondi ,Nambuthalai ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து