×

அய்யலூரில் அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து திருட்டு: மர்மநபர்களுக்கு வலை

 

அய்யலூர், மே 9: அய்யலூர் பேரூராட்சி அலுவலகம் பகுதியில் ஒரு தனியார் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு அய்யலூரை சேர்ந்த விஜயகுமார் (40) செல்போன் கடையும், கிணத்துப்பட்டியை சேர்ந்த பரமன் (45) சைக்கிள் கடை மறறும் மிக்ஸி கிரைண்டர் பழுது பார்க்கும் கடையும், கருவார்பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி (30) கம்யூட்டர் சென்டரும் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு வேலை நேரத்தை முடித்து 3 பேரும் கடைகளை அடைத்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை அவர்கள் திறக்க வந்த போது 3 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அளித்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவு மர்மநபர்கள் 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்ததும், செல்போன் கடையில் 4 ஆன்ட்ராய்டு போன்கள், 2 கீபேடு போன்கள், 4 ஸ்பீக்கர்கள், ரூ.2000 பணம் திருடு போனதும், மற்ற 2 கடைகளில் எவ்வித ெபாருளும் திருடு போகவில்லை என்பதும் தெரயவந்தது. தொடர்ந்து திண்டுக்கல் கைரேகை நிபுணர் எஸ்ஐ முருகன் சம்பவ இடத்தில் தடயங்களை ஆய்வு செய்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அய்யலூரில் அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து திருட்டு: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,
× RELATED திறந்தவெளி கிணற்றில் ஆட்டோ பாய்ந்து டிரைவர், பயணி பலி: வடமதுரை அருகே சோகம்