×

கடமலைபுத்தூர் ஊராட்சியில் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் நுதன போராட்டம்

மதுராந்தகம்: கடமலைபுத்தூர் ஊராட்சியில் உள்ள நடுநிலை பள்ளியை தரம் உயர்த்தகோரி, அந்த ஊராட்சி பொதுமக்கள் பள்ளியில் உள்ள புகார் பொட்டியில் புகார் மனு போடும் நுதன போராட்டத்தை தொடங்கியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கடமலைபுத்தூர் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளி உள்ளது. இதனை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி அப்பகுதிய மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், நடுநிலைப்பள்ளி அமைப்பதற்கு போதிய இடவசதி, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் இருப்பதாகவும், அங்கு நடுநிலைப்பள்ளியை கட்ட முடியும் என அவர்கள் அரசுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியை தரம் உயர்வதற்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், உயர்நிலைப்பள்ளி அமைவதற்கு தேவையான இடவசதி இல்லை என அரசுக்கு தவறான தகவல் அளித்ததாக கூறப்பட்டுகிறது. அதன் காரணமாக, நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி ஆவதற்கு இந்த தலைமை ஆசிரியர் தடையாக இருப்பதாகவும் ஊராட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பள்ளியின் நுழைவாயில் அருகே நேற்று முன்தினம் பொதுமக்கள் சார்பாக புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. இதில், அப்பகுதி மக்கள் இந்த பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர வேண்டும் என்பது குறித்து தங்களின் கருத்துக்களை இந்த புகார் பெட்டியில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் ஞாயிறுகிழமை விடுமுறை நாள் என்பதால் இப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தவர். அதனால், புகார் பெட்டியில் மனு போடும் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம் என அந்த ஊராட்சியை சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

The post கடமலைபுத்தூர் ஊராட்சியில் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் நுதன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kadamalaiputhur panchayat ,Madhurandakam ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்