×

உச்ச நீதிமன்றத்தில் மக்கள் நலப்பணியாளர் சீராய்வு மனு

புதுடெல்லி: மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் இருக்கும் வரையில் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து செயல்படும். ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அந்த திட்டம் நீடிக்கும் என கடந்த மாதம் 11ம் தேதி தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் தன்ராஜ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உச்ச நீதிமன்றத்தில் மக்கள் நலப்பணியாளர் சீராய்வு மனு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Mahatma Gandhi ,Rural Work ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...