×

திருப்பதியில் பல அடுக்கு பாதுகாப்புகளையும் மீறி ஏழுமலையான் கோயிலுக்குள் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்த பக்தர்: சமூக வலைதளங்களில் வைரல்

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தரிசனத்திற்கு செல்வதற்கு முன்பு மூன்று இடங்களில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ், சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் திருப்பதி திருமலையில் பலத்த மழை பெய்த நிலையில், பக்தர் ஒருவர் கோயிலுக்குள் தான் கொண்டு சென்ற செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இரண்டு இடங்களில் சோதனையில் செல்போன் கொண்டு சென்றதை பாதுகாப்பு போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசாரின் அலட்சியத்திற்கு இந்த வீடியோ காட்சிகள் உதாரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த வீடியோ வெளிவந்த நிலையில் இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பதியில் பல அடுக்கு பாதுகாப்புகளையும் மீறி ஏழுமலையான் கோயிலுக்குள் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்த பக்தர்: சமூக வலைதளங்களில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Yeumalayan Temple ,Tirupati ,Tirumala ,Swami Darshan ,Tirupati Seven Malayan Temple ,Seven Malayan Temple ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி