×

குன்னம் பகுதியில் 2 இடங்களில் திருடியவர் கைது

குன்னம், மே.8: குன்னம் பகுதியில் 2 இடங்களில் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 4 பவுன் நகை, பணம், செல்போன் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.குன்னம் தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மகன் பிரபாகரன் என்பவரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 4 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்று விட்டனர். மேலும் அதே கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் வைத்திருந்த ரூ.90ஆயிரம்- பணத்தை பீரோவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நன்னை கிராமத்தில் மங்களமேடு காவல்நிலைய காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.

இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதையடுத்து மேலும் விசாரணையில் அவர் நல்லூர் கிராமத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வட்டம் குருவாடி பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மதியழகன் (38) என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகை, பணம் ரூ.2000, 1 செல்போன் மற்றும் இருசக்கரவாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர் கல்லணை எமாபுரீசுவரர் கோயிலில் சுவாமி வீதி உலா மே 17வரை முகாம் நடைபெறுகிறது.

The post குன்னம் பகுதியில் 2 இடங்களில் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gunnam ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...