×

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

ஜெயங்கொண்டம், மே 8: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.பொட்டக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்த சாமிதுரை மனைவி வளர்மதி (50). இவரது வகையறாக்களுக்கு சொந்தமான த.பொட்டக்கொல்லையில் உள்ள செல்லியம்மன் கோயிலில் யாரோ சிலர் அத்துமீறி பூஜை செய்வதாக தகவல் அறிந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பொன்னுசாமி(53) என்பவர் வளர்மதியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ மணிவண்ணன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Jayangkondam ,Samithurai ,Varamathi ,T. Pottakollai South Street ,Wodeyarpalayam, Ariyalur district.… ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பேருந்தின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர் கைது