×

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு

 

கம்பம், மே. 8: கம்பம் முகைதீன் ஆண்டவர் புரம் தெருவைச் சேர்ந்தவர் பாரிஷா பேகம் (54). இவர் கடந்த 4ம் தேதி குடும்பத்துடன் கேரளா மாநிலம் குமுளிக்கு சென்றுவிட்டு இரவு கம்பத்தில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கியுள்ளார்.பின்னர் 5ம் தேதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பாரிஷா பேகம் புகாரில், கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post வீட்டின் கதவை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kampham ,Parisha Begum ,Gampam Mukaidin ,Andavar Puram Street ,
× RELATED கம்பம் நகராட்சி அலுவலகத்தில் அரிசி...