×

தென்மேற்கு பருவமழையின் போது நீலகிரியில் 456 பாதுகாப்பு மையங்கள் தயார்: கலெக்டர் தகவல்

 

ஊட்டி, மே 8: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், 3500 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அதன்பின்னர் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்கின்றன. இந்த இரு பருவமழைகளின் போது மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு, குடியிருப்புகளின் மீது மரங்கள் விழுதல் போன்ற பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

பருவமழை சமயங்களில் ஏற்பட கூடிய இயற்கை இடர்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசுகையில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 283 பகுதிகள் கண்டறியப்பட்டு இப்பகுதியினை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

The post தென்மேற்கு பருவமழையின் போது நீலகிரியில் 456 பாதுகாப்பு மையங்கள் தயார்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...