×

‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0’ 659 கஞ்சா வியாபாரிகள் கைது: l விற்பனை குறித்து தகவல் அளித்தால் சன்மானம்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கஞ்சா உட்பட போதை பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அந்த ஆணையின்படி கடந்த 2 ஆண்டுகளில் கஞ்சா வேட்டை 1.0, 2.0,3.0 நடந்து முடிந்தன. மீண்டும் கஞ்சா விற்பனை தலை தூக்க விடாமல் தடுக்க கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 6 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பெண்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் 41 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் 15 டன் குட்கா மற்றும் 2 லாரிகள் தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர போலீஸ் கமிஷனர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கஞ்சா மற்றும் பிற போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள், அவற்றை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும், tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க பண வெகுமதியும் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0’ 659 கஞ்சா வியாபாரிகள் கைது: l விற்பனை குறித்து தகவல் அளித்தால் சன்மானம் appeared first on Dinakaran.

Tags : Ganja Hunt ,Chennai ,Tamil Nadu Police ,DGP ,Sailendrababu ,Tamil ,Nadu ,Chief Minister ,Narcotics ,
× RELATED சேமநல நிதியில் இருந்து 16 காவலர்...