×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் நம்பர் 1 இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து, 21 வயது) மோதிய சபலென்கா (25 வயது, 2வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஸ்வியாடெக், அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஸ்வியாடெக்கின் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்து முன்னேறிய சபலென்கா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 26 நிமிடத்துக்கு நீடித்தது. சபலென்கா வென்ற 13வது டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டம் இது. முதல் முறையாக மாட்ரிட் ஓபன் பைனலுக்கு முன்னேறி இருந்த நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக், கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை பறிகொடுத்து 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Madrid Open ,Madrid ,Spain ,Belarus ,Arina Sabalenka ,Dinakaran ,
× RELATED துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ஆஸி. ஓபன் சாம்பியன் சபலென்கா அதிர்ச்சி தோல்வி