×

சில்லி பாயின்ட்…

* மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) ஜோடி 3-6, 6-3, 3-10 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கரென் கச்சனோவ் – ஆந்த்ரே ருப்லேவ் ஜோடியிடம் போராடி தோற்று 2வது இடம் பிடித்தது.

* உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 51 கிலோ எடை பிரிவில், இந்திய வீரர் தீபக் டோக்கியோ ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் 2021ல் உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான சகேன் பிபோசினோவை (கஜகஸ்தான்) வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

* கியூபாவின் ஹவானா நகரில் நடக்கும் உலக தடகள போட்டியின் ஆண்கள் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 17.37 மீட்டர் தாண்டி தேசிய சாதனையை முறியடித்ததுடன் 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் தகுதிக்கான தர அளவையும் மிஞ்சி அசத்தினார்.

* பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நேற்று நடந்த 5வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 49.3 ஓவரில் 299 ரன் குவித்து ஆல் அவுட்டானது. வில் யங் 87 ரன், கேப்டன் லாதம் 59, மார்க் சாப்மேன் 43 ரன் விளாசினர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : India ,Rogan Bopanna ,Matthew Epton ,Doubles ,Madrid Open Tennis Series ,Dinakaran ,
× RELATED போபண்ணாவுக்கு பாராட்டு விழா