×

அரக்கோணம் அருகே பரபரப்பு; வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்களுக்கு தனிப்படை வலை

அரக்கோணம்: மைசூரில் இருந்து காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை சென்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மகேந்திரவாடி-அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 6.30 மணியளவில் சென்றபோது திடீரென ரயில் பெட்டி மீது மர்மநபர்கள் கற்களை வீசியுள்ளனர். இதில், ரயிலில் 6வது பெட்டியின் கண்ணாடி உடைந்து சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் சென்னையை சென்றடைந்ததும் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்று அதிகாலை வரை மகேந்திரவாடி-அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள தண்டவாள மார்க்கத்தில் கண்காணித்தனர்.

The post அரக்கோணம் அருகே பரபரப்பு; வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்களுக்கு தனிப்படை வலை appeared first on Dinakaran.

Tags : Bustle ,Arakkonam ,Stone ,Vande Bharat ,Express ,Mysore ,Chennai ,Katpadi ,
× RELATED மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான...