×

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை பண்ணாரியில் அமைந்துள்ள வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளின் அருகே 3 காட்டு யானைகள் ஒரு குட்டி யானையுடன் அப்பகுதியில் உலா வந்தன. யானைகள் நடமாட்டத்தை கண்ட சோதனைச் சாவடி ஊழியர்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன.

The post பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Pannari Cheshwar ,Sathamangalam ,Mysore National Highway ,Pannari ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...