×

தேனி அருகே வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவிற்கான ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

தேனி: தேனி அருகே வீரபாண்டியில், புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா இரவு, பகல் என எட்டு நாட்களுக்கு நடக்கும். இவ்விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசிப்பர். இத்தகைய விழா வருகிற 9ம் தேதி முதல் வருகிற 16ம் தேதி வரை நடக்க உள்ளது. விழாவிற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பங்கள் அம்மனை வழிபட்ட பிறகு சற்று இளைப்பாறிடவும், குடும்பத்தினர் குதூகலம் அடையவும் கோயில் வளாகத்தில் ராட்டினங்கள் அமைக்கப்பட உள்ளது.

இதில் பிரமாண்ட வகையிலான ராட்டினங்கள், சாகசங்கள், திருவிழா கடைகள் அமைக்கப்பட உள்ளன. திருவிழா தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் கோயில் வளாகத்தில் ராட்டினங்கள் அமைக்கும் பணி, தற்காலிக உணவு விடுதிகள், பேன்சிக்கடைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. ராட்டினங்கள் அமைக்கும் பணி முடிவடைந்ததும், பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை அனுமதி பெற்றபிறகு, மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று ராட்டினங்கள் இயக்கப்பட உள்ளது.

The post தேனி அருகே வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவிற்கான ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chitrait festival ,Veerapandi ,Theni ,Gaumariamman ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில்...