×

தமிழகத்தில் 4 நகரங்களில் இயக்கப்படும் தாழ்தள பஸ்களுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு வாங்கிய 499 தாழ்தள பேருந்துகளையும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கலாம் என அடையாளம் காண போக்குவரத்து துறை, சாலை போக்குவரத்து நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள 499 தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இந்த பேருந்துகள் எந்த நேரத்தில் இயக்கப்பட உள்ளன என்பது குறித்து அறிவிக்கும் வகையில் 4 நகரங்களுக்கும் தனித்தனி செயலிகளை உருவாக்க வேண்டும். இந்த உலகம், மாற்றுத் திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், முதியோருக்கும் சொந்தமானது என்பதால், பொது போக்குவரத்தை அவர்களும் அணுகும் வகையில் அமைக்க வேண்டும். தாழ்தள பேருந்துகளை இயக்கும் வகையில் சாலைகளையும், வேகத்தடைகளையும் அறிவியல் பூர்வமாக அமைக்க வேண்டும். பேருந்து நிறுத்தங்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்க வேண்டும். அவர்கள் பேருந்தில் ஏறி, இறங்க ஏதுவாக பொறுமையுடன் செயல்படும் வகையில் ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post தமிழகத்தில் 4 நகரங்களில் இயக்கப்படும் தாழ்தள பஸ்களுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Govt ,Chennai ,Vaishnavi Jayakumar ,Chennai High Court ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...