×

2026க்குள் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலங்களாக அமைக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுரை

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தமிழகத்தில் உள்ள மொத்த 1281 தரைப்பாலங்கள் 2026க்குள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவுபடி, தற்போது நடைபெறும் பாலப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலர் பிரதீப் யாதவ், முதன்மை இயக்குநர் சாந்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் 2026ம் ஆண்டிற்குள் அனைத்து தரைப்பாலங்களும் உயர்மட்ட பாலங்களாக கட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் பாலங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும், விரிவான கள ஆய்வுக்கு பின் மதிப்பீடு தயார் செய்தல், ஆற்றின் நீரியியல் விபரங்கள், மண் பரிசோதனைகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பாலப்பணிகள் மேற்கொள்ள மழை இல்லாதபோது அடித்தளம் அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேற்கொண்டு தரத்தினை உறுதி செய்ய வேண்டுமென என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

The post 2026க்குள் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலங்களாக அமைக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Chennai ,Highways ,Highway Research Institute ,Guindy, Chennai ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...