×

செம்பனார்கோயிலில் திமுக மூத்த முன்னோடி மிசா. மதிவாணன் மறைவு: அமைச்சர், எம்பிக்கள் அஞ்சலி

செம்பனார்கோயில், மே.6: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தின் திமுக மூத்த முன்னோடியும், வடக்கு ஒன்றிய செயலாளர் பிஎம்.அன்பழகன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் பிஎம்.தர் ஆகியோரின் தந்தையுமான பெரியார் விருது பெற்ற மிசா. பி.மதிவாணன் நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை அறிந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான முக.ஸ்டாலின், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழக தோழர்களுக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் நேற்று திமுக எம்பி டி.ஆர். பாலு, அமைச்சர் மெய்யநாதன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், எம்பி கல்யாணசுந்தரம், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கவுதமன், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கல்யாணம், எம்பி ராமலிங்கம், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் ,பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கழக மாவட்ட செயலாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பிற கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் ஏராளமானோர், அவரது இல்லத்திற்கு சென்று உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The post செம்பனார்கோயிலில் திமுக மூத்த முன்னோடி மிசா. மதிவாணன் மறைவு: அமைச்சர், எம்பிக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Misa ,DMK ,Sembanarkoil ,Mathivanan ,Mayiladuthurai District ,Sembanarkoil Union ,Northern Union ,PM Anpahagan ,Tanjore Zone ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திர ஊழல் வழக்கில் பிரதமர்...