×

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிறுமுகையில் நீர் நிரப்பிய தட்டில் செங்குத்தாக நின்ற உலக்கை

 

மேட்டுப்பாளையம், மே 6: 2023ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பவுர்ணமி நாளான நேற்றிரவு 8.41 மணியளவில் துவங்கி அதிகாலை 01.01 வரை நிகழ்கிறது. இது பகுதி சந்திர கிரகணமாக பெனும்பிரல் சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். இந்தியாவில் தெரியாது என கூறப்படுகிறது. சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும், சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் என்று மூன்று வகையான சந்திர கிரகணங்களையும், கிரகணங்களைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் இது முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும்.

The post சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிறுமுகையில் நீர் நிரப்பிய தட்டில் செங்குத்தாக நின்ற உலக்கை appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Chitra Poornami ,
× RELATED நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து வெல்டரை வெட்டி வெடிகுண்டு வீச்சு