×

அவதூறு பரப்பும் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை

கடலூர், மே 5: கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மனைவி செல்வி என்பவர் கடலூர் மாவட்ட எஸ்பியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி என் மகள் மதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி பள்ளியில் மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதையடுத்து சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி விசாரணையிலும் சின்னசேலம் காவல் நிலையத்திலும் மதி சந்தேக மரணம் என்றுதான் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் பள்ளி தரப்பினர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தனர். அவர்களின் ஜாமின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, பாலியல் பலாத்காரமும் இல்லை. கொலையும் இல்லை என்றும், இது தற்கொலை தான் என்று பதிவு செய்தார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதி சொன்ன அனைத்து கருத்துகளையும் நீக்க வேண்டும் என தீர்ப்பு அளித்து உள்ளது. இந்நிலையில். ஒரு பிரபல யூடியூப் சேனலில், எப்போதும் இது தற்கொலை என்றும், என்னையும் என் கணவரையும், என் மகளையும் அவதூறாக பேசி எங்களது புகைப்படங்களும் பரப்பப்பட்டு வருகிறது. எனவே அந்த யூடியூப் சேனலில் உள்ள எங்கள் குடும்பம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் நீக்கி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post அவதூறு பரப்பும் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : YouTube ,Cuddalore ,Ramalingam ,Selvi ,Periyanesalur ,Dinakaran ,
× RELATED யூ டியூப் பார்த்து தயாரித்த பெட்ரோல்...