×

வீட்டுமனை வழங்குவதாக கூறி 18 பேரிடம் ₹16.27 லட்சம் மோசடி முதியவர் கைது: 3 பேருக்கு வேலை

விழுப்புரம், மே 5: விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஷாகுல்அமீது(48). இவர் அண்மையில் எஸ்பி நாதாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த நத்தர்ஷா, சாதிக்பாஷா(53), நத்தர்ஷா மகன்கள் ஷாஜி, அசாருதீன் ஆகியோர் சேர்ந்து கடந்த 2014ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் லட்சுமிபுரம் கஸ்பா காரணை என்ற பகுதியில் பிஸ்மி நகர் என்ற வீட்டுமனை பிரிவை அமைத்தனர். அதில் ரூ.1,600 வீதம் 60 மாதங்கள் பணத்தை கட்டினால் அதற்குண்டான மனை பிரிவுகள் பதிவு செய்து தரப்படும் என்று தெரிவித்தனர்.

இதேபோல் 2016ம் பொயப்பாக்கத்தில் ரோஜா நகர் என்ற வீட்டுமனை பிரிவை தொடங்கிய அவர்கள் 55 மாதங்கள் ரூ.1,200 வீதம் கட்டினால் மனையை பதிவு செய்து தருவதாக கூறினர். அதன்படி என்னை போன்று மொத்தம் 18 பேர் ரூ.16,27,500 பணத்தை கட்டினோம். ஆனால் எங்களுக்கு வீட்டுமனை பதிவு செய்து தரவில்லை. ஆசை வார்த்தைகளை கூறி கூட்டு சதி சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து பலரின் கதையை முடித்தது போல் உங்களுக்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து பணத்தை கொடுக்காமல் கதையை முடித்து விடுவதாக மிரட்டினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டுமென புகாரில் கூறியிருந்தார். இது குறித்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்பி நாதா உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு எஸ்ஐ ராஜலட்சுமி தலைமையான போலீசார் விசாரணை நடத்தி, 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சாதிக்பாஷாவை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

The post வீட்டுமனை வழங்குவதாக கூறி 18 பேரிடம் ₹16.27 லட்சம் மோசடி முதியவர் கைது: 3 பேருக்கு வேலை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Shakul Ameedu ,Muthoppu ,SP Natha ,
× RELATED விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ்...