×

ஓய்வூதியர்கள் இறந்த பிறகு வங்கி கணக்கில் பணம் எடுத்ததாக வாரிசுதாரர்கள் மீது புகார்

 

அருப்புக்கோட்டை, மே 6: அருப்புக்கோட்டையில் உள்ள சார்நிலை கருவூல அலுவலகம் மூலம் 4 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிய ஆண்டுதோறும் வங்கி மூலம் நேர்காணல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக வழக்கமாக நடைபெற வேண்டிய நேர்காணல் 2022ம் ஆண்டு வரை நடைபெறவில்லை. வைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த நேர்காணலுக்கு 30க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வரவில்லை.

விசாரணையில் அவர்கள் இறந்து விட்டனர் என்பது தெரியவந்தது. ஆனால் இறந்த ஒய்வூதியர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.95 லட்சம் வரை, அவர்களது வாரிசுதாரர்கள் எடுத்துள்ளனர். இது குற்றச்செயல் என அவர்களிடம் கூறப்பட்டது. இவர்களில் 20க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களின் வாரிசுதாரர்கள், வங்கி கணக்கில் இருந்து எடுத்த தொகையை செலுத்தி விட்டனர். ஆனால் சிலர் ரூ.15 லட்சம் வரை அரசு கணக்கில் செலுத்தவில்லை. இதையடுத்து உதவி கருவூல அலுவலர் சரவணன், ஒய்வூதியர்களின் வாரிசுதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓய்வூதியர்கள் இறந்த பிறகு வங்கி கணக்கில் பணம் எடுத்ததாக வாரிசுதாரர்கள் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Arapukkotta ,Dharidya Treasury Office ,Arapukkotte ,Dinakaran ,
× RELATED மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை...