×

இளநீர் வியாபாரியிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது

மேலூர், மே 6: மேலூர் அருகே இளநீர் வியாபாரியிடம் செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலூர் அருகே வல்லாளபட்டியில் இளநீர் கடை வைத்து நடத்தி வருபவர் முத்தழகன் மகன் மாரம்மதி(17). இவர் நேற்று கடையில் இருந்தபோது மர்ம நபர்கள் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் இளநீர் குடித்துவிட்டு அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். பின் திடீரென அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.3,200ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

இதுகுறித்து மாரம்மதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மேலவளவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் இந்த வழிப்பறியில் ஈடுபட்ட மேலூரை சேர்ந்த கண்ணதாசன்(30), மணிபாரதி, ரஞ்சித்குமார், உஸ்மான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post இளநீர் வியாபாரியிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : MALORE ,Melore ,MULOR ,
× RELATED கொரியர் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி...